Beginner Guide to Create Google AdSense Account: இந்த பதிவில் Google AdSense பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். அதாவது உலகில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் Google AdSense பயன்படுத்தி ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்கின்றனர்.
ஒருவேளை நீங்கள் ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்க விரும்பினால் இந்த AdSense மிகவும் சிறப்பான Platform ஆகும்.
நீங்கள் Website அல்லது YouTube Channel பயன்படுத்தி ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த Google AdSense மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த பதிவில் AdSense என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது? நீங்கள் எப்படி ஒரு புதிய AdSense Account உருவாக்கலாம்? என்பதை பற்றி தெளிவாக கூற போகிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முழுமையாக படியுங்கள்.
Table of Contents
What Is Google AdSense?
Google AdSense என்பது கூகுள் நிறுவனத்தின் ஒரு Advertising Platform ஆகும். இதன் மூலம் உங்கள் Blog அல்லது YouTube Channel பயன்படுத்தி நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம்.
உங்கள் வலைதளத்தில் உள்ள Content Quality பொறுத்து AdSense விளம்பரங்களை உங்களுடைய வலைதளத்தில் காண்பிக்கும்.
வலைதள பார்வையாளர்கள் உங்கள் வலைதளத்தில் உள்ள விளம்பரங்களை Click செய்யும்போது உங்களுக்கு பணம் கிடைக்கும் .
நமது வலைதளத்தில் விளம்பரங்களை காண்பிக்க நிறைய Ad Networks உள்ளது. ஆனால் Google Adsense-தான் சிறப்பான ஒன்று.
ஏனெனில், குறைந்தபட்சம்$1-$100 CPC (Cost Per Click) நீங்கள் பெறலாம்.
Benefits Of Google AdSense
1.இது கூகுளின் தளம் என்பதால் நீங்கள் பயப்படாமல் உங்கள் வலைதளத்தை இந்த Ad Network- உடன் இணைத்துக்கொள்ளலாம்.
2.தற்போது வரை இரண்டு மில்லியன் மேற்பட்ட மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
3.வலைதளம் வைத்திருக்கும் யார்வேண்டுமானாலும் இலவசமாக Google AdSense பயன்படுத்தலாம். உங்கள் வலைத்தளத்திற்கு வரக்கூடிய வருமானத்தை உங்களாலும் மற்றும் Advertiser ஆகிய இரண்டு பேராலும் பார்க்க முடியும்.
Google AdSense Requirements
புதிதாக AdSense Account உருவாக்க உங்களுக்கு ஒரு Gmail Account மற்றும் வலைதளம் இருந்தால் போதுமானது.
உங்கள் வலைதளத்திற்கு Google AdSense Approval பெறுவதற்கு நீங்கள் கண்டிப்பாக High Quality Content வலைதளத்தில் Publish செய்து இருக்க வேண்டும்.
ஏனெனில் அதிக தரமான Content- மட்டும் தான் Google உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் வலைதளத்தில் குறைந்தது 25-30 வரை Unique & High Quality Articles இருக்க வேண்டும்.
உங்கள் வலைதளத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு Content-ம் Original மற்றும் Unique- ஆக இருக்கவேண்டும் அதாவது வேறொருவரின் வலைதளத்தில் இருந்து Copy செய்து Upload செய்ய கூடாது.
Google Publisher Policy கொள்கையின்படி உங்களது Content இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் உங்கள் வலைதளத்தில் சரியாக இருந்தால் போதும் நீங்கள் AdSense Approval எளிமையாக பெற முடியும்.
அடுத்ததாக புதிதாக Google AdSense Account எப்படி உருவாக்கலாம் என்பதை பார்க்கலாம்.
How To Create a Google AdSense Account & Apply For AdSense
1.முதலில் Google AdSense இணையதளத்திற்கு செல்லவும்.
2.உங்களிடம் ஏற்கனவே Gmail Account இருந்தால் Sign என்ற பட்டனை Click செய்யவும்.
ஒருவேளை உங்களிடம் Google Account இல்லை என்றால் Create Account என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3.மூன்றாவதாக உங்கள் வலைதளத்தின் URL-ஐ Paste செய்யவும்.
- நான்காவதாக Yes or No என்ற ஆப்ஷன் காண்பிக்கும். Google AdSense பற்றி உங்களுக்கு Mail தேவைப்பட்டால் Yes என தேர்வு செய்யவும். ஒருவேளை AdSense பற்றி உங்களுக்கு எந்த Mail-ம் தேவை இல்லை என்று நினைத்தால் No என்பதை தெரிவு செய்யவும்.
- அடுத்ததாக Save And Continue என்ற பட்டனை Click செய்யவும்.
பின்பு உங்கள் முகவரியை சரியாக தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு AdSense Ad Code கிடைத்துவிடும் அதனை உங்கள் வலைதளத்தில் Header பகுதியில் Paste செய்யவும்.
அவ்வளவுதான் நீங்கள் உங்களுடைய வலைதளத்தை Google AdSense நிறுவனத்திற்கு Apply செய்துவிட்டீர்கள்.
உங்கள் வலைதளம் Reject செய்யப்படுகிறதா அல்லது Approve செய்யப்படுகிறதா என்பது உங்களுக்கு Gmail மூலமாக தெரிவிப்பார்கள்.
உங்கள் வலைதளத்தில் Content சரியாக இருந்தால் அதிகபட்சம் ஐந்து நாட்களுக்குள் Approval கிடைத்து விடும். ஒருவேளை ஏதேனும் தவறு இருந்தால் Mail மூலம் உங்களுக்கு தெரியும் அதனை நீங்கள் சரி செய்து திரும்ப Reapply செய்தால் போதும் Approval கிடைக்கும்.
AdSense Approval கிடைத்த பிறகு உங்கள் வலைதளத்தில் எங்கு விளம்பரங்கள் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து கொண்டு AdSense Ad Code பயன்படுத்தி தேவையான இடத்தில் விளம்பரங்களை நீங்கள் எளிமையாக பொருத்திக் கொள்ளலாம்.
AdSense Approval வாங்குவது எளிது. ஆனால் நிறைய நண்பர்களுக்கு இந்த ஒரு விஷயம் தற்போது வரை சவாலாக இருக்கிறது.
ஏனென்றால் அவர்கள் சரியான Content Publish செய்வதில்லை. நீங்கள் தரமான மற்றும் தனித்துவமான Content உங்கள் வலைதளத்தில் Publish செய்யும் பொழுது கண்டிப்பாக Approval எளிமையாக பெற முடியும்.
தற்போதுவரை AdSense Approval என்றால் என்ன? மற்றும் AdSense Approval எப்படி நமது வலைதளத்திற்கு பெறுவது போன்றவற்றை தெளிவாக பார்த்தோம்.
இப்பொழுது AdSense எப்படி வேலை செய்கிறது? அந்த நிறுவனம் நமக்கு ஏன் பணம் வழங்குகிறது போன்றவற்றை பார்க்கலாம்.
How Does Google AdSense Work?
தற்போது எல்லா நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் விளம்பரத்தை செய்கின்றனர். இந்த விளம்பரங்களை Google AdSense எடுத்துக் கொண்டு நம்முடைய வலைதளத்தில் விளம்பரங்களை காண்பிக்கிறது.
விளம்பரம் கொடுப்பவர்கள் Advertiser மற்றும் விளம்பரங்களை காண்பித்தவர் Publishers என்று அழைக்கப்படுகிறார்கள்.
AdSense நிறுவனம் Advertiser-மிருந்து பணத்தை வாங்கி அதில் ஒரு குறிப்பிட்ட பங்கு (தோராயமாக 68%) நமக்கு பணத்தை அளிக்கிறது.
How Does AdSense Pay Out?
Google AdSense Account-ல் உங்களுக்கு குறைந்தது $100 முழுமையாக இருந்தால் மட்டுமே பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும். இல்லையென்றால் $100 வரும்வரை உங்கள் AdSense Account-ல் தான் அந்த பணம் இருக்கும்.
நீங்கள் முழுமையாக $100 Complete செய்த பிறகு 21-ம் தேதி அந்தப் பணம் உங்கள் வங்கிக்கு அனுப்பப்படும். பணம் உங்கள் வங்கிக்கு சென்ற தகவலை Mail மூலம் கூகுள் AdSense உங்களுக்கு தெரியப் படுத்தும்.
உங்கள் AdSense பணம் 5 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் உங்கள் வங்கியில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்.
Conclusion
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க Google AdSense ஒரு சிறந்த Platform ஆகும். ஆனால் நிறைய நண்பர்களுக்கு Approval வாங்குவது மிகப்பெரிய விஷயமாக தற்போது வரை இருக்கிறது.
நீங்கள் Google AdSense Policies Program நன்றாக படித்து அதன்படி உங்கள் வலை தளத்தை அமைத்து Apply செய்யும் போது Approval எளிமையாக பெறலாம்.
எனவே இந்த பதிவில் Google AdSense என்றால் என்ன? எவ்வாறு Google AdSense Account உருவாக்குவது? மற்றும் உங்கள் வலைத்தளத்தை பயன்படுத்தி எவ்வாறு நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்கலாம் போன்ற அனைத்தையும் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்.
ஒருவேளை உங்களுக்கு இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment Box-ல் பகிரவும்.
Google AdSense FAQ
What Is Impression?
Impression என்பது உங்கள் வலைதளத்தில் காண்பிக்கக் கூடிய விளம்பரங்களின் எண்ணிக்கை ஆகும்.
What Is CPC (Cost Per Click) ?
ஒரு நபர் ஒரு விளம்பரத்தை Click செய்தால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கிடைக்கும். ஒரு விளம்பரத்திற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இந்த CPC உங்களுக்கு காண்பிக்கும். CPC-ன் மதிப்பை Advertiser தீர்மானிப்பார்.
What Is CTR ( Click Through Rate) ?
CTRஎன்பது Impression-ல் இருந்து வரக்கூடிய Click-ன் எண்ணிக்கையாகும்.
CTR=Clicks/Impressions
What Is Page CTR?
உங்கள் வலைதளத்தின் Page Views-ல் இருந்து வரக்கூடிய Click-ன் எண்ணிக்கை Page CTR ஆகும்.
Page CTR=Clicks/Page Views
What Is Page RPM (Revenue Per Thousand Impression)?
RPM என்பது உங்கள் வலைதளத்தில் 1000 விளம்பரங்கள் காண்பித்தால் எவ்வளவு உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பதை காண்பிக்கும்.
Page RMP= Estimated Earnings/Number Of Page Views
More Useful Articles: