10 Simple Ways To Make Money While Studying In College: ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன அவற்றில் எவை நேர்மையாக உள்ளது மற்றும் எவை சிறந்தது என்பது பற்றி நமக்குத் தெரியாது.
நீங்கள் எவ்வாறு பணத்தை எளிமையாக சம்பாதிக்கலாம் மற்றும் என்னென்ன வழிகள் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எனவே முழுவதுமாக படியுங்கள்.
இதில் வரும் வழிமுறைகளில் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்து அதனை நீங்கள் தொடர்ச்சியாக செய்யும்பொழுது உvtங்களால் எளிமையாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும்.
Table of Contents
1.Affiliate Marketing

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று இந்த Affiliate Marketing. இந்த Affiliate Marketing பற்றி நிறைய நண்பர்களுக்கு தெரிவதில்லை.
ஆனால் இதை பயன்படுத்தி உங்களால் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த வழி நீங்கள் பணத்தை சம்பாதிப்பதற்கு நிரந்தரமாக (Permanent) இருக்கும்.
வேறு ஒருவரின் பொருட்களை நீங்கள் சந்தைப்படுத்தினால் அதனை ஒருவர் வாங்கும் பொழுது உங்களுக்கு குறிப்பிட்ட Commission கிடைக்கும்.
உங்களுக்கு பொருட்களை Review செய்வதற்கு ஆர்வமாக உள்ளது என்றால் கண்டிப்பாக நீங்கள் இந்த முறையை தேர்வு செய்யலாம்.
ஒரு பொருளைப் பற்றி குறிப்புகளை நீங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது உங்களுடைய பார்வையாளர்களுக்கு அந்தப் பொருள் பிடித்து இருந்தால் அவர்கள் அதனை வாங்கிக் கொள்வார்கள்.
அவ்வாறு வாங்கும் பொழுது உங்களுக்கு Commission கிடைக்கும். இதனால் உங்களால் பணத்தை எளிமையாக சம்பாதிக்க முடியும்.
Best High Paying Affiliate Programs
Name | Demo |
Hostinger | View |
Bluehost | View |
Elementor | View |
shopify | View |
Kinsta | View |
SEMrush | View |
SitegGound | View |
Click Funnels | View |
Get Response | View |
2.Start YouTube Channel

தற்போது எளிமையாக ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது நீங்கள் உங்களுக்கென ஒரு YouTube Channel உருவாக்கி அதில் உங்களுக்கு தெரிந்த வீடியோக்களை பதிவிடும் பொழுது உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை Youtube-ல் வீடியோக்களை பார்க்கின்றனர். எனவே பொழுது போக்கு சமூக ஊடகமாக உள்ள இந்த YouTube பயன்படுத்தி உங்களால் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்க முடியும்.
யூடியூபில் பணத்தை சம்பாதிப்பதற்கு உங்களுக்கு ஒரு சில ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவை என்னென்ன என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
- நீங்கள் பதிவிடும் வீடியோ ஒவ்வொன்றும் உங்களுடைய வீடியோவாக இருக்க வேண்டும். அடுத்தவருடைய வீடியோவை எடுத்து நீங்கள் உங்கள் சேனலில் பதிவிட கூடாது.
- Youtube-ல் நீங்கள் சீக்கிரமாக பணத்தை சம்பாதிக்க மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை பற்றிய வீடியோக்களை உருவாக்கி அவர்களை நீங்கள் மகிழ்விக்கும் பொழுது உங்களுடைய பார்வையாளர்களுக்கு உங்களுடைய சேனல் மிகவும் பிடிக்கும்.இதனால் உங்கள் சேனலின் வீடியோக்களின் பார்வையானது அதிகமாக இருக்கும் இதன் மூலம் உங்களால் அதிகமான பணத்தை எளிதில் சம்பாதிக்க முடியும்.
- நீங்கள் வீடியோக்களை தொடர்ச்சியாக Youtube-ல் Upload செய்ய வேண்டும் அப்போதுதான் உங்களுடைய பார்வையாளர்கள் உங்களுடைய சேனலில் நிரந்தரமாக இருப்பார்கள்.இல்லையெனில் நீங்கள் வீடியோக்களை தொடர்ச்சியாக Upload செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டு சேனலை Subscribe செய்யமாட்டார்கள்.
3.Make Your Own Course

தற்போது கற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் அனைவரும் ஆன்லைனில் தான் படிக்கின்றனர்.
இதனால் நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை ஒரு வீடியோவாக உருவாக்கி அதனை நீங்கள் Course வடிவில் விற்கும் பொழுது உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.
உதாரணமாக உங்களுக்கு Video Editing பற்றி நன்றாக தெரியும் என்றால் அதை எப்படி செய்வது அதற்கு எந்த Software பயன்படுகிறது என்பதைப் பற்றி தெளிவான விளக்கத்துடன் நிறைய வீடியோக்களை உருவாக்கி அவற்றை ஒரு Course- ஆக நீங்கள் விற்கலாம்.
இதன் மூலம் Video Editing கற்றுக் கொள்ள ஆசைப்படுகிற நண்பர்கள் உங்களது வீடியோக்களை பணம் செலுத்தி வாங்கி அதனை படிப்பார்கள். இதனால் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
4.Blogging

Blogging செய்து நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு வலைதளம் இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்கிய பிறகு நீங்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை Type செய்து ஒரு Content உருவாக்கி அதனை உங்கள் வலைதளத்தில் நீங்கள் Post செய்யும்பொழுது உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
நீங்கள் நன்றாக ஆங்கிலம் Type செய்ய தெரிந்தவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த துறையை பயன்படுத்தலாம்.
ஏனெனில் இந்தத் துறையில் Type செய்வது மட்டுமே மிகவும் முக்கியமான ஒன்று. அது தெரிந்தால் போதும் நீங்கள் மாதம் லட்சக்கணக்கில் பணத்தை ஆன்லைனில் இருந்து சம்பாதிக்கலாம்.
5. Paid Writing Work

ஒரு பெரிய வலைதளத்தை ஒருவர் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதனால் வலைதள உரிமையாளர்கள் அவர்களுடைய வலைதளத்திற்கு Content எழுத ஆட்களை தேடுவார்கள்.
உங்களுக்கு நன்றாக Content எழுதத் தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை Content-ஆக எழுதி வலைதள உரிமையாளருக்கு கொடுக்கும் பொழுது உங்களுக்கு பணம் கிடைக்கும்.
நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏற்ப பணத்தை நீங்கள் வலைதள உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
6.Buying and Selling Domain Names

Domain பெயர்களை வாங்குவது மற்றும் விற்பது வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பதற்கான மிகச்சிறந்த வழியாகும்.
ஏன் இதை மிகச் சிறந்த வழி என்று கூறுகிறேன் என்றால் முதலீடு என்பது மிகவும் குறைவு மற்றும் நேரமும் குறைவு.
பெரிய பெரிய நிறுவனம் மற்றும் புகழ்பெற்ற பெயர்களில் உள்ள Domain பெயர்களை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதனை நீங்கள் அதிக விலைக்கு விற்கலாம்.
இந்த முறையில் பொறுமை என்பது மிகவும் அவசியமானது ஏனெனில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டொமைன் பெயர்களும் விற்க கண்டிப்பாக ஆறு மாத காலம் எடுத்துக் கொள்ளும்.
7.Sell Your Own Photos

உங்களுக்கு Photography துறையில் மிகவும் ஆர்வம் இருந்தால் இந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம்.
அதாவது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் உங்களால் எளிதாக விற்க முடியும்.நீங்கள் எடுக்கும் படம் பிறருக்கு பிடித்திருந்தால் போதும் அதனை அவர்கள் காசு கொடுத்து உங்களிடம் வாங்கிக் கொள்வார்கள்.
உங்களது புகைப்படத்தை நீங்கள் விற்பதற்கு நிறைய வலைதளம் உள்ளது. கீழ்கண்ட வலைதளங்களை பயன்படுத்தி உங்களுடைய அழகிய புகைப் படத்தை நீங்கள் விற்க முடியும்.v
8.Make Own E-commerce Website

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வழியில் இவையும் மிக முக்கியமான வழி. அதாவது நீங்கள் சொந்தமாக ஒரு E-Commerce Website உருவாக்க வேண்டும்.
பின்பு உங்களுடைய அல்லது வேறு ஒருவருடைய பொருட்களை உங்களுடைய வலைதளத்தில் பதிவிட்டு அதனை நீங்கள் விளம்பரப்படுத்தி அதன் மூலம் உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.
9.Advertising

ஒரு நிறுவனம் அல்லது பொருட்களை பற்றி நீங்கள் உங்களுடைய YouTube Channel அல்லது வலைதளத்தில் விளம்பரப்படுத்துவதன் மூலம் உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியும்.
நீங்கள் விளம்பரப்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஏற்ப தொகையை நீங்கள் அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த வழிமுறை அனைவருக்கும் பயன்படாது. ஏனெனில் அனைவரிடமும் வலைதளமோ அல்லது YouTube Channel இருக்காது.
10. Graphics Designer

உங்களுக்கு நன்றாக Graphics Design செய்ய தெரிந்திருந்தால் உங்களால் எளிமையில் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும். இதற்கு நிறைய வலைதளங்கள் உள்ளது.
அதில் சென்று உங்களுக்கு என்னென்ன தெரியும் என்பதைப் பற்றி தெளிவாக உங்கள் Account-ல் பதிவிட வேண்டும்.
இப்படி செய்யும்போது Graphics Design தேவைப்படும் நண்பர்கள் உங்களுடைய பக்கத்தை பார்வையிட்டு உங்களுடைய Design அவர்களுக்குப் பிடித்திருந்தால் உங்களுக்கு Order கொடுப்பார்கள்.
எந்தெந்த வலைத்தளத்தில் நீங்கள் Graphics Design செய்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றிய விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Conclusion
மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினால் உங்களால் ஆன்லைனில் பணத்தை சம்பாதிக்க முடியும்.
எனவே உங்களுக்கு எந்த வழிமுறை சுலபமாக உள்ளதோ அதனை நீங்கள் செய்யும்பொழுது உங்களுக்கு தேவையான பணத்தை நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்கலாம்.
இந்தப் பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment Section-ல் பதிவிடவும்.