How To Make Money As a Graphics Designer (7 Methods)

How To Make Money As a Graphics Designer: நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஆனால் அதனை நமக்கு சரியாக பயன்படுத்த தெரியாது.

உங்களுக்கு Graphics Design நன்றாக செய்யத் தெரிந்தால் போதும் நீங்கள் பல வழிகளில் ஆன்லைனில் இருந்து பணத்தை சம்பாதிக்க முடியும்.

அவை என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் மிகவும் விரிவாக பார்க்க போகிறோம்.

ஒரு சில நண்பர்களுக்கு Graphics Design என்றால் என்ன என்பதே தெரியாது. முதலில் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

What Is Graphics Design?

ஒரு நிறுவனத்திற்கு Logo மற்றும் Bill Board இது போன்ற டிசைன் வேலைகளை நீங்கள் அந்த நிறுவனத்திற்கு தகுந்தவாறு செய்து கொடுப்பதுதான் கிராபிக்ஸ் டிசைன்.

நீங்கள் நன்றாக Graphics Design செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அதற்கு நிறைய Graphics Design Tools தேவை. ஆரம்பத்தில் இதனை கற்றுக்கொள்வது என்பது சிறிது கடினமான விஷயம்.

நான் என்னுடைய Government Laptop-ல் தான் இதனை கற்றுக் கொண்டேன். நீங்கள் உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு Laptop அல்லது Computer-ல் கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் ஒரு நல்ல கிராபிக்ஸ் டிசைனராக இருந்தால் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது உங்களுக்கு மிகவும் சுலபமான விஷயம்.

இதற்கு நீங்கள் குறிப்பிட்ட நேரம் வேலை செய்தாலே போதும் பணத்தை எளிமையாக சம்பாதிக்கலாம்.

1.Sell Your Own Templates

How To Make Money As a Graphics Designer
Sell Your Own Templates

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிக சிறந்த வழி இந்த Graphics Design.நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றை ஒரு டிசைனாக உருவாக்கி அதனை நீங்கள் வேறு ஒருவரிடம் Template ஆக விற்கலாம்.

உதாரணமாக உங்களுக்கு Invitation Design செய்ய தெரிந்து இருந்தால் என்னென்ன மாடல்களில் Invitation-களை Design செய்ய முடியும் என்பதை முழுவதுமாக நீங்கள் Design செய்து அதனை ஒரு Template-ஆக உருவாக்க வேண்டும்.

Read Also:  What Is Compounding Effect?

பின்பு அதனை நீங்கள் ஆன்லைனில் மிக எளிமையாக விற்க முடியும் இதன் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

2.Make Webinar Photos

Make Webinar Photos

ஆன்லைனில் கற்பது என்பது இப்போது அதிகமாக உள்ளது. தற்போது நிறைய நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை ஆன்லைனில் தான் விற்கின்றனர்.

நீங்கள் ஒரு நிறுவனத்திடம் பேசி அவர்கள் எடுக்கும் பாடத்திற்கு என்னென்ன படங்கள் தேவை என்பதை அறிந்து கொண்டு அதனை நீங்கள் அழகாக டிசைன் செய்து தரும் பொழுது அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை தரும். இதன் மூலம் நீங்கள் எளிமையாக சம்பாதிக்கலாம்.

3.Make Logo For Company

Create Logo for Company

Logo என்பது ஒரு நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இந்த லோகோவை வைத்துதான் ஒருவர் அந்த நிறுவனத்தின் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

எனவே அந்த அளவிற்கு மிகவும் தனித்துவமாக விளங்குவது தான் இந்த Logo. இதனை உங்களுக்கு உருவாக்க தெரிந்தால் போதும் நீங்கள் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம்.

ஒரு நிறுவனத்திற்கு எந்த மாதிரி Logo தேவை மற்றும் அவை என்னென்ன வண்ணங்களுடன் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நீங்கள் உருவாக்கிய தரும்பொழுது உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

Logo என்பது மிக சிறியதாக இருந்தாலும் அதனை உற்று பார்க்கும் போது அதில் பல விஷயங்கள் இருக்க வேண்டும் அவ்வாறு நீங்கள் Logo-வை உருவாக்கினால் தான் நீங்கள் ஒரு நல்ல Graphics Designer.

4.Design Creative Fonts For Customized Logo

Customized Fonts

நீங்கள் உங்களுக்கான தனித்துவமாக ஒரு Font Style-ஐ  உருவாக்கினால் உங்களால் அதிகமான பணத்தை சம்பாதிக்க முடியும்.

ஏனெனில் தற்போது நிறைய நிறுவனங்கள் Customized Logo-வை தான் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் நீங்கள் ஒரு Font-ஐ எடுத்து அதனை வேறு ஒரு மாதிரி Customize செய்து உருவாக்கி தரும்பொழுது பணத்தை சம்பாதிக்க முடியும்.

உதாரணமாக நீங்கள் செய்யும் ஒரு Design-ற்கு  அதிகபட்சமாக $100 வரை சம்பாதிக்கலாம் .

Read Also:  10 Simple Ways To Make Money While Studying In College

5.Work As a Freelancer

Freelancer.com என்று சொல்லக்கூடிய இந்த வலைதளத்தில் நீங்கள் உங்களுக்கென ஒரு Account உருவாக்கி அதில் உங்களுக்கு என்னென்ன டிசைன் செய்ய தெரியும் என்பதை தெளிவாக பதிவிட வேண்டும்.

டிசைன் தேவைப்படுகின்ற நிறுவனங்கள் உங்களுடைய Profile-ஐ பார்த்துவிட்டு உங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான டிசைனை செய்து கொள்வார்கள்.

இதன் மூலம் உங்களுக்கு Clients மற்றும் பணம் கிடைக்கும்.

6.Make YouTube Thumbnails

Make YouTube Thumbnails

தற்போது ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழியாக YouTube விளங்குகிறது.

நீங்கள் ஒரு நல்ல Graphics Designer-ஆக இருந்தால் இதனை பயன்படுத்தி எளிமையாக பணம் சம்பாதிக்கலாம்.

உதாரணமாக நீங்கள் ஒரு YouTube Channel-ஐ  தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான Thumbnail-களை  நீங்கள் உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

7.Sell Printable Images

Sell Printable Images

ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை அழகாக Color Correction செய்து பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.

அவ்வாறு செய்து அதனை நீங்கள் ஆன்லைனில் விற்கும்போது  உங்களால் எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும்.

குறிப்பாக நீங்கள் Cartoon படங்களை எடுத்து Design­­­­­­­ செய்தால் உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும். ஏனெனில் தற்போது குழந்தைகள் அனைவரும் அதை தான் விரும்புகின்றனர்..

 Read Also:

1.How To Choose Perfect Domain Name For Your Website

2.Best Keyword Research Tools In 2021

Leave a Comment