Top 7 WordPress Security Plugins in 2023

WordPress Security Plugins: உங்களுடைய WordPress வலைதளத்தை நீங்கள் உருவாக்கிய பிறகு அதனை பாதுகாப்பது என்று மிகவும் அவசியமான ஒன்று.

எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் உங்களது வலைதளத்தை திருட முடியும்.

எனவே வலைதளத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்.

இந்த ஒரு பதிவு உங்கள் வலைதளத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

WordPress-ல் ஆயிரக்கணக்கான Security Plugins உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது ஆனால் அவற்றில் எவை சிறந்தவை என்பதை பற்றி கீழே பார்க்கலாம்.

Wordfence Security

Wordfence ஒரு சிறந்த மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய Security Plugin ஆகும். இதனை தற்போது வரை நான்கு மில்லியன் வலைதளத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

best wordpress security plugins

இந்த Plugin உங்களுடைய வலைதளத்தின் Plugin Files, Theme Files, Posts, Images, Comments, Incorrect URL போன்றவற்றைஸ்கேன் செய்து உங்கள் வலைதளத்தை பாதுகாக்கிறது. 

இவை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். தேவைப்பட்டால், நீங்கள் காசு கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம் அதில் நிறைய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Wordfence Security பயன்படுத்தும்போது உங்களுடைய வலைதளத்தை வேறு யாராலும் Login செய்ய முடியாது.

ஒரு வேலை அவர்கள் உங்கள் வலைதளத்தை திருட முயற்சித்தாலும் உங்களுக்கு Notification Alert மூலம் காண்பிக்கும்.

இதன் மூலம் உங்களது வலைதளத்தை எளிமையாக பாதுகாக்க முடியும்.

WordPress Blog வைத்திருக்கும் அனைவரும் இந்த Plugin பயன்படுத்துமாறு நான் பரிந்துரை செய்கிறேன்.

Wordfence Security Premium வாங்கினால் என்னென்ன அம்சம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Read Also:  Beginner Guide to Create Google AdSense Account
Feature NameFree VersionPremium Version
Malware ScannerBasicReal-Time Updates
Malware CleanerAvailableAvailable
FirewallBasicReal-Time Updates
Two Factor AuthenticationAvailableAvailable
Wordfence CentralAvailableAvailable
Geo BlockingNot AvailableAvailable
24×7 SupportNot AvailableAvailable
Reputation ChecksNot AvailableAvailable

Pricing and Plans

Plan NamePrice / Year
Wordfence Premium$119
Wordfence Care$490
Wordfence Response$950

iThemes Security

iThemes என்ற இந்த Plugin 1 மில்லியன் வலைதளங்களுக்கும் மேலாக Install செய்துள்ளனர்.

இதில் Free மற்றும் Premium Version ஆகிய இரண்டு உங்களுக்கு கிடைக்கும்.

இலவசமாக பயன்படுத்தும் போது என்னென்ன அம்சம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

உதாரணமாக உங்கள் Website Password -ஆக இருந்தால் அதனை Strong Password Set செய்யுமாறு உங்களை பரிந்துரைக்கும்.

அடுத்ததாக உங்கள் வலைதளத்தின் SSL Certificate சரியாக உள்ளதா என்பதை Scan செய்யும்.

வெளி நபர் உங்கள் வலைதளத்தை Login செய்ய நினைத்தால் நீங்கள் எளிமையாக கண்டறியலாம்.

இதுவே நீங்கள் இந்த Plugin-ஐ Premium Version-ஆக பயன்படுத்தினால் என்னஅம்சங்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

மேற்கண்ட அம்சங்களில் உங்களுக்கு எவை தேவைப்படுமோ அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

iThemes Security Free vs Pro

Feature NameProFree
Realtime Security DashboardYesNo
Passkeys for More Secure LoginsYesNo
Magic Links & Password Less LoginYesNo
Two-Factor AuthenticationYesYes
Site ScannerYesYes
File Permission CheckYesYes
Settings Import & ExportYesNo
User Activity LoggingYesNo
Database BackupsYesYes
File Change DetectionYesYes
Private, Ticketed SupportYesNo
Trusted DevicesYesNo
User GroupsYesNo
Version ManagementYesNo
Password ExpirationYesNo
Email NotificationsYesYes
Security LoggingYesYes
WP-CLI IntegrationYesNo
Local & Network Brute Force ProtectionYesYes

Sucuri

Sucuri ஒரு சிறந்த Plugin என்று சொன்னால் அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

Read Also:  Site Management in AdSense is Changing (Update)

இதை நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்று உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக சந்தேகம் இருக்கும்.

ஆமாம், இந்த Security Plugin நிறைய அம்சங்களை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 

அதாவது மற்ற Plugin-களை காட்டிலும் காசு கொடுத்து வாங்க வேண்டிய சில அம்சங்களையும் இது உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்பதால் தான் நான் இதை இப்படி கூறுகிறேன்.

Features of Sucuri Plugin

  • Malware Removal SLA
  • Post-Cleanup Basic Report
  • Site Covering
  • SSL Support & Monitoring
  • Advanced DDos Mitigation
  • CDN Speed Enhancement
  • High Availability
  • CMS & Hosting Compatibility
  • Support Requests

உங்கள் வலைதளத்திற்கு வரக்கூடிய Bad Traffic இந்த Sucuri Filter செய்து நல்ல Traffic மட்டும் அனுமதிக்கும்.

மிகவும் முக்கியமானது என்னவென்றால் உங்களுடைய WordPress வலைதளத்தில் உங்களுக்கே தெரியாமல் ஒருவேளை Malware இருக்கலாம்.

அவற்றை தானாக கண்டுபிடித்து உங்கள் Website-லிருந்து எளிமையாக நீக்கிவிடும் இதனால் உங்கள் வலைதளம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

Pricing And Plans

Plan NamePrice / Year
Basic Platform$199.9
Pro Platform$299.9
Business Platform$499.9
Multi-site & Custom PlansChat With Team

All in One WP Security

All In One WordPress Security மிகச் சிறந்த Website Protector ஆகும்.  இவை உங்கள் வலைதளத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நபரையும் மிகவும் துல்லியமாக கண்காணிக்கும்.

அதாவது உங்கள் வலைதளத்தில் Attacks, IP Filtering, File Integrity Monitoring, User Account Monitoring, Scanning Pattern of Database Injection இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய வேலைகளை செய்கிறது.

நம் வலைத்தளத்திற்கு என்னென்ன பாதுகாப்பு தேவையோ அவை அனைத்தையும் உங்களுக்கு இவை பரிந்துரை செய்யும்.

இந்த All in One WP Security பரிந்துரை செய்கின்ற அனைத்தையும் நீங்கள் சரியாக செய்தால் போதும் உங்களது வலைதளத்தை யாராலும் Attack செய்ய முடியாது.

Read Also:  11 Ways To Increase Your Website Traffic Organically
Free VersionPaid Version
Supports Best PracticeProtech Latest Threats
Hide Login Page From Bots.hta Access File Protection
Login Lockout6G Blacklist
ReportingBlacklist Functionality
Force LogoutsDisable PHP File Editing
Two-Factor AuthenticationPrevent DDOS Attacks
Password Strength ToolFile Changing Detection
General Visitor LockoutAccess Prevention

WPScan Security

WPScan ஒரு தனித்துவம் வாய்ந்த Plugin ஆகும். ஏனெனில் உங்களுடைய வலைதளத்தை தினம் தினம் இவை Scan செய்யும் அதில் ஏதேனும் தேவையில்லாத Unwanted Files இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிடும்.

இந்த WPScan 21,000 மேற்பட்ட வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றன.

உங்களது வலைதளத்தை எப்போதெல்லாம் Scan செய்ய வேண்டும் என்பதை Automatic Scan-ல் எளிமையாக செட் செய்து கொள்ளலாம்.

உங்களதுWebsite Beginning Level-ல் இருந்தால் உங்களுக்கு Free Version போதுமானது.

ஒரு வேலை உங்களது Blog பெரிதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் Premium Version வாங்கியே ஆக வேண்டும் என்பதுதான் நான் பணிந்து இருக்கிறேன்.

ஏனெனில், நீங்கள் உங்கள் வலைதளத்தை எவ்வளவுதான் கஷ்டப்பட்டு தரமானதாக உருவாக்கினாலும் அதற்கு பாதுகாப்பு என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று.

எனவே Premium Version நீங்கள் வாங்கும்பொழுது அதில் நிறைய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனால் உங்கள் வலைதளத்தை திருட நினைத்தாலும் அல்லது Attack செய்ய முடியாது. 

Malware Security

இந்த  Malware Security Plugin மிகவும் சிறப்பு அம்சம் வாய்ந்ததாகும்.  ஏனென்றால் புதிதாக வலைதளம் தொடங்கிய அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவேளை உங்களுக்கு வலைதளம் Attack செய்யப்பட்டால் அடுத்த ஒரு Single Click மூலம் அதை எளிமையாக சரி செய்ய முடியும்.

இவை இலவசமாகவும் கிடைக்கிறது அல்லது உங்களுக்கு Premium Version வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

Basic Scanning செய்வது மூலம் உங்கள் வலைதளத்தில் ஏதேனும் தேவையற்ற Files இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்களது வலைதளம் முழுவதையும் நீங்கள் Scan செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் Paid Version வாங்கியாக வேண்டும்.

JetPack

JetPack அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் ஏனென்றால் WordPress பயன்படுத்தும் அனைவரும் இந்த Plugin பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறேன்.

இந்த JetPack உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.  ஆனால் ஒரு வலைதளத்திற்கு என்னென்ன அம்சம் தேவையோ அவை அனைத்தையும் இவை கொண்டுள்ளது.

இந்த Plugin பயன்படுத்துவதால் உங்கள் வலைதளத்தின் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டுமே அதிகரிக்கும்.

Features of Jetpack

  • Automatic Realtime backups and restores
  • Malware scanning
  • Spam protection and blocking
  • Brute force protection
  • Uptime and downtime monitoring
  • 2FA
  • Regular Plugin Updates

Conclusion

வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக Security Plugins பயன்படுத்த வேண்டும்.  

ஏனென்றால் நீங்கள் உங்கள் நேரத்தை செலவழித்து ஒரு Website உருவாக்குவீர்கள் அதனை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது நம்முடைய கடமை.

நான் என்னுடைய ஐந்து வருட அனுபவத்தில் மேற்கண்ட அனைத்து உலகங்களையும் என்னுடைய வலைதளத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.

எனவே உங்களுக்கு எந்த Plugin சரியாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பதிவு புதிதாக வலைதளம் உருவாக்கிய அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சம்பந்தமாக உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் நீங்கள் கீழே உள்ள Comment Section-ல் தெரிவிக்கலாம். 

Leave a Comment