11 Ways To Increase Your Website Traffic Organically

11 Ways To Increase Your Website Traffic Organically: வணக்கம் நண்பர்களே நம்மில் பலருக்கு நமது வலைதளத்தின் Organic Traffic-ஐ  எப்படி அதிகரிப்பது என்பது பற்றி தெரியாது.

ஆனால் அவற்றை நீங்கள் சுலபமாக Increase செய்ய முடியும் .அதற்கு உங்களுக்கு ஒரு சில குறிப்புகள் தெரிந்தாலே போதுமானது.

கீழ்கண்ட இந்த முறைகளை பயன்படுத்திதான் நான் என்னுடைய வலைதளத்திற்கு Traffic-ஐ   கொண்டு வருகிறேன் அவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

1. Create Eye Catching Headlines

Increase Your Website Traffic
Eye Catching Headline

உங்களது வலைதளத்தில் நீங்கள் எழுதக்கூடிய ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பு (Heading) மிகவும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவை உங்கள் வலைப்பக்கத்தை பார்த்தவுடனே Click செய்ய உதவும்.

நீங்கள் உருவாக்கும் கவர்ச்சிகரமான தலைப்பு உங்களுடைய வலைதளத்தின் CTR-ஐ அதிகரிக்க மிகவும் உதவும்.

நீங்கள் எவ்வளவு நேரம் தான் உங்களுடைய வலைதளத்திற்கு Content எழுதினாலும் அவற்றிற்கு தலைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இப்பொழுது கண்டிப்பாக இந்த சந்தேகம் இருக்கும். எப்படி கவர்ச்சிகரமான தலைப்புகளை உருவாக்குவது? அதை பற்றி தெளிவாக பார்க்கலாம்

How to Create Perfect Headline For Your Content

பார்வையாளர்கள் எதை தேடி உங்கள் வலைத்தளத்திற்கு வருகிறார்களோ அதை நீங்கள் தெளிவாக கூறும் வகையில் உங்கள் வலைதள பக்கத்தின் தலைப்பு இருக்க வேண்டும்.

Video Credit: Neil Patel

உதாரணமாக ஒருவருக்கு Gmail Account எப்படி Create செய்வது என்பது தெரியவில்லை என்றால் அவற்றுக்கு நீங்கள் How To Create Gmail என்று தலைப்பு எழுத கூடாது.

இது பார்வையாளர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்காது. எனவே நீங்கள் How To Create Gmail Account In Simple Steps அல்லது இந்த ஆண்டின் வருடம் போன்ற ஒரு சில விஷயங்களை நீங்கள் தலைப்பில் சேர்க்கும் பொழுது அது பார்ப்பதற்கு கவர்ச்சியான தலைப்பாக இருக்கும்.

Read Also:  Site Management in AdSense is Changing (Update)

அதுமட்டுமல்லாமல் நீங்கள் உருவாக்கும் தலைப்பு உங்களது பார்வையாளர்களுக்கு பார்த்த உடனே புரியும் வண்ணம் இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த Keyword– ஐ  Focus செய்து Content எழுதுகிறார்களோ அதற்கு தகுந்தவாறு உங்களுடைய தலைப்பு இருந்தால் மிகவும் நல்லது.

2.Choose Longtail Keyword

Choose Longtail Keyword

உங்களது வலைத்தளத்தை நீங்கள் சீக்கிரமாக Ranking செய்ய இந்த Long Tail Keyword– ஐ  தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் தற்பொழுது Blogging துறையில் போட்டிகள் என்பது மிகவும் அதிகமாக உள்ளது.

எனவே அவற்றில் நீங்கள் போட்டியிடுவது என்பது கடினமான விஷயம். இதனால் நீங்கள் Long Tail Keyword-ஐ தேர்வு செய்யும் பொழுது உங்களுடைய வலைதளம் மேல் பக்கத்தில் (First Page) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் Blogging துறைக்கு புதியவராக இருந்தால் கண்டிப்பாக இதை தவறாமல் செய்ய வேண்டும். இது உங்களது வலைதளத்தின் Organic Traffic-ஐ  அதிகரிப்பதோடு இல்லாமல் உங்கள் வருமானத்தையும் (Income)  அதிகரிக்கும்.

3.Use Light Weight Themes For Your Website

Use Light Weight Themes

உங்களது வலைதளம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்து இருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் வலைதளத்தை வடிவமைக்க வேண்டும்.

உங்கள் வலைதளம் பார்வையாளர்களுக்கு பிடிக்க வேண்டுமென்றால் நீங்கள் இலவச Theme– ஐ பயன்படுத்துவதை விட Premium Theme– ஐ பயன்படுத்தலாம்.

ஏனெனில் நீங்கள் Theme- ஐ காசு கொடுத்து வாங்குவதால் உங்களுக்கு அதில் நிறைய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களது வலைதளத்தின் Category- ஐ  பொருத்து உங்களுக்கு தேவையான Theme– ஐ நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். கீழே உள்ள Theme-களில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Best WordPress Premium Themes

Theme NameOfficial Link
Generatepress PremiumLink
NewspaperLink
NeveLink
Ocean WPLink
DiviLink
Kedence WPLink
Astra ProLink

Best Free WordPress Themes

4.Make High Quality Content

நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். தரமான பதிவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும் அவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

How to Write Quality Content

உங்கள் வலைதளத்தில் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் உங்களது சொந்தமான பதிவாக இருக்க வேண்டும். இதைத்தான் Google உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறது.

Read Also:  Top 5 Keyword Research Tools In 2023

அதாவது உங்களுக்கு தெரிந்ததை மட்டும் எழுத வேண்டும் மற்றவர் வலைதளத்தில் இருந்து எதையும் எடுத்து Post செய்யக்கூடாது.

Video Credit: Matt Diggity

உங்களது பார்வையாளர்களுக்கு நீங்கள் எழுதும் பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் உங்கள் வலைதளத்தின் பார்வை நேரம் (Average View Time) அதிகரிக்கும். இதனால் உங்களது வலைதளம் எளிதில் மேல் (Top Page) பக்கத்திற்கு வரும்.

பார்வையாளர்கள் எதைத்தேடி உங்கள் வலைதளத்திற்கு வருகிறார்களோ அதனை நீங்கள் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அப்போதுதான் உங்களுடைய பார்வையாளர்கள் நீண்ட நேரம் உங்களுடைய வலைதளத்தில் இருப்பார்கள் இதனால் உங்களுடைய பார்வையாளருக்கு உங்கள் வலைதளம் மிகவும் பிடிக்கும்.

5. Create Own Infographics

ஒரு பதிவில் நீங்கள் எதை தெளிவாகக் கூற விரும்புகிறீர்களோ அதை பற்றி ஒரு Infographics நீங்கள் உருவாக்க வேண்டும்.

அதாவது நீங்கள் 1000 வார்த்தைகளில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை ஒரே ஒரு புகைப்படம் அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிடும்.

எனவே வலைதளத்திற்கு Infographics என்பது மிகவும் அவசியமான ஒன்று. இவற்றை எப்படி உருவாக்குவது என்று நிறைய நண்பர்களுக்கு தெரியாது.

Read Also: How to Make Money as a Graphic Designer

ஆனால் அவற்றை நீங்கள் எளிமையாக உருவாக்க முடியும். அதற்கான ஒரு சில குறிப்புகள்.

1.Photoshop

Adobe Photoshop

உங்களுக்கு கண்டிப்பாக Adobe Photoshop மென்பொருள் பற்றி தெரிந்து இருக்கும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Infographics-ஐ நீங்கள் மிகவும் சுலபமாக உருவாக்கிக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு Photoshop பயன்படுத்த தெரியவில்லை என்றால் இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது.

2. Canva

Canva

Canva என்று சொல்லக்கூடிய இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்களால் எளிமையாக Infographics உருவாக்க முடியும்.

இதற்கு எந்தவித தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை.

இந்த வலைதளம் இலவசமாகவும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்தியும் உங்களால் பயன்படுத்த முடியும்.

நீங்கள் பணம் செலுத்தி இந்த வலைதளத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு நிறைய வசதிகள் இதில் இருக்கும்.

என்னுடைய கருத்து நீங்கள் இலவசமாக பயன்படுத்தினாலே போதும்.

இவ்வாறு நீங்கள் Infographics Create செய்து உங்களுடைய வலைதளத்தில் பதிவிடும் பொழுது உங்கள் வலைதளத்தின் Backlink அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Read Also:  How To Choose Best Domain Name (7 Pro Tips)

6.Compress Your Images

Compress Your Images

உங்கள் வலைதளத்திற்கு உருவாக்கும் ஒவ்வொரு போட்டோவையும் நீங்கள் Compress செய்ய வேண்டும்.

ஏனெனில் இவ்வாறு செய்யும் போது உங்களது வலைதளத்தின் Loading Speed அதிகமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் அந்த போட்டோவின் அளவு குறையும். போட்டோவை Compress செய்ய நிறைய வலைதளம் உள்ளது. அதனை நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக,

Compress JPEG

Compress JPEG

Website Planet

Website Planet

இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்கள் வலைத்தளத்திற்கு நீங்கள் உருவாக்கிய போட்டோவை எளிமையில் Compress செய்து கொள்ள முடியும்.

நான் என்னுடைய வலைத்தளத்தில் உள்ள போட்டோவை Compress செய்ய பயன்படுத்திய வலைதளங்களில் மிகவும் சிறந்த Image Compressing Website இது.

7.Create YouTube Channel

உங்கள் வலைதளத்தின் பெயரில் ஒரு Youtube Channel உருவாக்க வேண்டும்.

ஏனெனில் நீங்கள் உருவாக்கிய ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு வீடியோ உருவாக்கி அதனை தெளிவாக விளக்கும் பொழுது பார்வையாளர்களுக்கு உங்கள் மேல் ஒரு நம்பிக்கை வரும்.

இதனால் உங்கள் வலைத்தளத்தின் பெயர் நிறைய நண்பர்களுக்கு தெரியும் இதன் மூலம் உங்கள் வலைதளத்தின் Traffic- ஐ அதிகரிக்க முடியும்.

8.Use SSL Certificate

வலைதளத்திற்கு SSL Certificate என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் உங்கள் வலை தளத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் உங்களது வலைதளம் அவர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை கண்டிப்பாக பார்ப்பார்கள்.

இந்த SSL Certificate இருந்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு உங்களுடைய வலைதளத்தின் மேல் ஒரு நம்பிக்கை வரும்.

ஒருவேளை உங்களது வலைதளத்தில் SSL Certificate Activate செய்யப்படவில்லை என்றால் பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக உங்கள் வலை தளத்தின் மேல் நம்பிக்கை வராது.

 அதுமட்டுமல்லாமல் உங்கள் வலைதளத்தை யாருக்கும் பரிந்துரை (Recommend)  செய்ய மாட்டார்கள்.

9.Use Social Share Plugin

Social Share Plugin ஆனது உங்கள் வலைதளத்தின் Website Traffic-ஐ அதிகப்படுத்துவதில் நிறைய உதவுகிறது.

ஆனால் நிறைய நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை.நீங்கள் Social Snap என்ற இந்தப் Plugin- ஐ பயன்படுத்தும்பொழுது உங்களால் சமூக வலைதளங்களில் இருந்து Traffic- ஐ எடுக்க முடியும்.

10.Update Your Content

Update Your Content

ஒவ்வொரு ஆண்டிற்கும் நீங்கள் எழுதிய பதிவை கண்டிப்பாக Update செய்ய வேண்டும்.

ஏனெனில் புதிய ஆண்டு வரும் பொழுது பார்வையாளர்கள் உங்கள் வலைதளத்தில் உள்ள பதிவு புதிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எனவே நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் உள்ள பதிவை ஆறு மாதத்திற்கு ஒருமுறை Update செய்யும் பொழுது உங்கள் வலைதளத்தின் Traffic- ஐ உயர்த்த முடியும்.

11.Add YouTube Video

Add YouTube videos

உங்கள் பதிவில் ஒரு YouTube Video கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு சில நண்பர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவு புரியவில்லை என்றால் நீங்கள் Upload செய்யும் YouTube வீடியோவை பார்த்து அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இதனால் உங்கள் வலைதளத்தில் அந்த பார்வையாளர்கள் நீண்ட நேரத்திற்கு இருப்பார்கள்.

இதன்மூலம் உங்களது வலைதளத்தின் Average View Time அதிகரிக்கும் இதனால் டி Traffic- ஐ உயர்த்த முடியும்.

மேற்கண்ட குறிப்புகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்யும் பொழுது உங்கள் வலைதளத்தின் Traffic- ஐ மிகவும் சுலபமாக உயர்த்த முடியும்.

Read Useful Contents:

Best Keyword Research Tool in 2023
How to choose Perfect Domain Name (Basic Guide)
How to Create Google AdSense Account

Leave a Comment