How to Learn Front End Development

நீங்கள் Programmer-ஆக  இருந்தால் கண்டிப்பாக Front End Development பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.  இல்லை என்றால் என்னவென்றே தெரியாது.

இந்த பதிவில் Front End Development என்றால் என்ன? அதனை நீங்கள் கற்றுக் கொள்வதற்கு எந்த இந்த Programming Language படிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் பார்க்கப்போகிறோம். எனவே இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

What is Front End Development?

ஒரு வலை தளத்தில் நீங்கள் பார்க்கக் கூடிய Button, Table, Links, Background இவை அனைத்தும் Front End Developer செய்யக்கூடிய வேலையாகும்.

ஒரு வலைதளத்தை அழகாக உங்களுக்கு காண்பிப்பதும் இவர் வேலைதான் உதாரணமாக நாம் Facebook வலைதளத்தை எடுத்துக்கொள்வோம்.

இதில் கொடுக்கப்பட்டுள்ள Logo, Button, Links போன்ற அனைத்தும் Front End Developer-ஆல்  உருவாக்கப்பட்டது ஆகும்.

இனி நீங்களும் எளிமையாகக் கற்றுக் கொள்ள முடியும்.

How to Learn Front-End Development?

Front End Development நீங்கள் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை தெளிவாக பார்க்கலாம்.

  • HTML 
  • CSS
  • Java Script

HTML – Hyper Text Markup Language

HTML என்பது ஒரு Markup Language ஆகும். உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஒரு வீட்டின் கட்டிட வேலை தான் HTML.  உங்கள் வலைதளத்தை அழகு படுத்துவதற்கு CSS பயன்படுகிறது. 

புதிதாக Front End Development  கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் நபர்கள் இதை ஒரு Programming Language என்று நினைத்து மிகவும் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

புதிதாக Web Development கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர்கள் அனைவரும் HTML எளிமையாக கற்றுக் கொள்ளலாம் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

Read Also:  5 Reasons Why Apple Products Are So Expensive

எளிமையான முறையில் HTML கற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய வலைதளத்தை நான் கீழே கொடுத்துள்ளேன் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

Best 5 Websites for learn HTML

Website NameLink
W3 SchoolView
Free Code CampView
Geeks for GeeksView
Code AcademyView
Tutorials PointView

ஒருவேளை நீங்கள் வீடியோ வடிவில் எளிமையாக HTML கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால் கீழே கொடுத்துள்ள வீடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

HTML Course In Tamil

CSS – Cascading Style Sheet

CSS என்பது உங்களுடைய வலைதளத்தின் Color, Layout, Animation, Responsible ஆகியவற்றை உருவாக்கக் கூடிய ஒரு Style Sheet ஆகும்.

இதனை நீங்கள் Freecode Camp என்ற வலைத்தளத்தின் மூலம் மிகவும் எளிமையாக கற்றுக் கொள்ளலாம். 

கற்றுக் கொண்ட பிறகு அதனை தினமும் எங்கள் பயிற்சி செய்ய வேண்டும் அப்போதுதான் உங்களால் உங்களுக்கு தகுந்த மாதிரியான வழி தளத்தை உருவாக்க முடியும்.

Java Script

ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு நகர்வதற்கு இந்த Java Script Language மிகவும் முக்கியமானது ஆகும்.

இதனை கற்றுக் கொண்டால் தான் உங்களால் Front End Developer என்று கூறவே முடியும். உதாரணமாக நீங்கள் பார்க்கக் கூடிய அனைத்து Applications, Games போன்ற அனைத்திலும் இந்த Java Script பயன்படுத்தப்பட்டிருக்கும்.

Conclusion

மேலே குறிப்பிட்டுள்ள படி படிப்படியாக எளிமையாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு பொறுமை என்பது மிகவும் அவசியமான ஒன்று.

Front End Development நீங்கள் கற்றுக் கொண்ட பிறகு உங்களுக்கு மாத வருமானம் 30K-50K  கிடைக்கும்.

எனவே இந்த ஒரு பதிவு  புதிதாக Web Development கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மற்றும் வேறு எந்த பதிவு உங்களுக்கு தேவை என்பதை கீழே உள்ள Comment Box-ல் தெரிவிக்கவும்.

Read Also:  How to Add Keyboard Shortcut for Dark Mode in Windows

Read More:

Leave a Comment