உங்களது பழைய வலைதளம் அல்லது புதிய வளைதளமாக இருந்தாலும் அதற்கு Keyword Research Tools என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
அதாவது சரியான Keyword-ஐ நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் தான் உங்களுடைய Website Traffic– ஐ அதிகரிக்க முடியும் Keyword Research செய்ய நிறைய Tools இருக்கின்றன.
ஆனால் அதில் எது சிறந்தது என்பது பற்றிய சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். எனவே இந்த பதிவில் உங்களின் வலைதளத்திற்கு Keyword Research செய்ய எந்த Tool மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Table of Contents
1.SEMrush
SEMrush ஒரு முக்கியமான Keyword Research Tool மட்டுமல்ல. இவை உங்களது போட்டியாளர்கள் பயன்படுத்தும் 5-10 உள்ள சொற்களை உங்களுக்கு எளிதாக காட்டும்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் போட்டியாளர் வலைதளத்தை விட உங்கள் வலைதளத்திற்கு Traffic-ஐ கொண்டுவரமுடியும்.
இந்த Keyword Research Tool-ல் இல் நிறைய சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்க்கலாம்.
SEMrush Features
1. Longtail Keyword-ஐ எளிதில் தேர்ந்தெடுக்க முடியும்.
2. உங்களுக்கு தேவையான Keyword-ஐ வருடம் வரிசையாக எடுத்துக்கொள்ள முடியும்.
3. ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உள்ள CPC (Cost Per Click) – ஐ மிகத் துல்லியமாக பார்க்க முடியும்.
4.உங்களது போட்டியாளரின் வலைதளத்திற்கு மாதம் எவ்வளவு Traffic வருகிறது என்பதையும் நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
Price And Details:
இதை உங்களால் 7 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்திய பிறகு இது உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்களுக்கு தேவையான Plan-ஐ Purchase செய்துகொள்ளலாம்.
SEMrush Plans:
Plan Name | Price/Month |
Pro | $119 |
Guru | $229 |
Business | $449 |
2.Ahrefs Keyword Explorer
மிகச்சிறந்த Keyword Research Tool-ல் இந்த Ahref முதலிடம் வகிக்கிறது. தற்போது அதிகமான Bloggers இந்த டூலை பயன்படுத்துகின்றன. மத்த Tool-களை காட்டிலும் இந்த Tool மிகவும் விலை உயர்ந்தது.
ஆனால் விலைக்கு தகுந்தவாறு இதில் நிறைய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Features Of Ahref Keyword Explorer
1. இதில் உங்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட Keyword- ஐ ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.
2.நீங்கள் தேர்வு செய்யும் Keyword- ஐ Ranking செய்வதற்கு எவ்வளவு சிரமம் என்பதற்கான விகிதமும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.
3. உலகிலுள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த Tool பயன்படுத்தப்படுகிறது.
4. உங்கள் வலைதளத்தின் CTR-ஐ அதிகரிப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
Price And Details:
Plan | Price |
Lite | $99 |
Standard | $179 |
Advanced | $399 |
Agency | $999 |
3.KWFinder
KWFinder என்ற இந்த Keyword Research Tool-ஐ Mangools என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவை உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு Tool-களைக் காட்டிலும் இதில் விலை குறைவு மற்றும் வசதிகளும் அதிகமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு சரியான வார்த்தையை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றிய விளக்கத்தை இந்த Mangools வலைதளத்தில் தெளிவாகக் கூறியுள்ளனர்.
Features Of KWFinder
1. உங்களுக்கு தேவையான Keyword- ஐ நீங்கள் எந்த மொழியிலும் தேர்ந்தெடுக்க முடியும்.
2. அனைவரும் பயன்படுத்தும்படி மிக எளிமையான வடிவமைப்பு.
3.உங்களது வலைதளத்தின் போக்குவரத்தை உயர்த்துவதற்கு தேவையான குறிப்புகளை எளிதில் பார்க்கலாம்.
விலை மற்றும் விபரங்கள்
Plan | Price |
Basic | Basic-$30 |
Premium | $40 |
Agency | $80 |
4.Ubersuggest (Free)
Neilpatel என்பவரால் உருவாக்கப்பட்ட Keyword research Tool இது. இதனை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் தேடும் வார்த்தைக்கு பொருந்துமாறு நிறைய Keywords எளிமையில் கண்டறிய முடியும்.
Website Analyzer
நம் வலைத்தளத்தை மிகவும் தரமாக உருவாக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிய Website Analyzer இந்த Neilpatel வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் குறிப்புகளைக் கருத்தில் கொண்டு வலைதளத்தை உருவாக்கும் போது நம்மால் வெற்றிகரமாக உருவாக்க முடியும்.
Ubersuggest Chrome Extension
நீங்கள் எளிமையில் பயன்படுத்தும் வகையில் Google Chrome Extension ஆக இந்த Tool உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
5.Google Keyword Planner
Google Keyword Planner என்ற இந்த Tool மிகவும் எளிமையானது.இதில் குறிப்பிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் உங்களால் எளிமையில் சரியான Keyword- ஐ தேர்ந்தெடுக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இது கூகுள் நிறுவனம் என்பதால் நம்பிக்கையாக இந்த Tool- ஐ நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் ஒரு Keyword டைப் செய்தால் போதும் அந்த Keyword-ற்கு எவ்வளவு Search Volume உள்ளது என்பதை கூகுள் உங்களுக்கு துல்லியமாக கொடுத்துவிடும்.
இந்த Tool பயன்படுத்துவதற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை முற்றிலும் இலவசம்.
Conclusion
மேற்கண்ட ஐந்து Tool-களில் என்னுடைய கருத்து நீங்கள் Google Keyword Planner-ஐ தேர்வு செய்யலாம்.
ஏனெனில், இவை கூகுள் நிறுவனம். எனவே உங்களுக்கு Search Volume மிகத் துல்லியமாக இருக்கும்.
காசு கொடுத்து Keyword Research செய்வதை விட கூகுள் நிறுவனம் உருவாக்கிய கூகுள் Keyword Planner என்ற இந்த டூலை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.