5 Reasons Why Apple Products Are So Expensive

Why Apple Products Are So Expensive : வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்களில் Apple நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். ஏன் இந்த நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் அதிக விலையில் உள்ளது என்பதை பற்றி யோசித்திருக்கிறீர்களா?

அவர்களுடைய போட்டியாளர்களை காட்டிலும் Apple நிறுவனத்தின் பொருட்கள் பத்து மடங்கு விலை அதிகமாக தான் விற்கப்படுகின்றன. இருந்தாலும்அதிகமான பொருட்கள் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே இந்த பதிவில் Apple நிறுவனத்தின் பொருட்கள் ஏன் அதிக விலையில் விற்கப்படுகின்றன மற்றும் அவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு அந்த பொருள் தகுதியனவையா? என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்க போகிறோம்.

ஒருவேளை நீங்கள் Apple நிறுவனத்தில் இருந்து ஏதேனும் Products வாங்க உள்ளவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே முழுமையாக படியுங்கள் .

1.Apple Eco System

Why Apple Products Are So Expensive
Apple’s Eco System

ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்று தான் கூற வேண்டும்.  உதாரணமாக நீங்கள் MacBook Air (Laptop) வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இந்த லேப்டாப்பை ஆப்பிள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய எந்த பொருட்களுடன் வேண்டுமானாலும் நீங்கள் எளிமையாக Connect செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு சங்கிலி தொடர்புடைய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் கொண்டுள்ளதால் அதிகமான பொருட்கள் விற்பனையாகின்றன.

இந்த மாதிரியான பல அம்சங்களையும் வழங்குவதால் தான் அதிக விலை கொடுத்து மக்கள் இந்த பொருட்களை வாங்குகின்றனர்.

2. High-Quality Products Better Than Competitors

High Quality Products

Smart Phone மற்றும் Laptop போன்றவற்றை தயாரிக்க அதிகமான நிறுவனங்கள் இருந்தாலும்  ஆப்பிள்Apple நிறுவனம் மட்டும் தனித்துவமாக தெரிவதற்கு மிகப்பெரிய காரணம் இது என்று கூறலாம்.

ஆமாம் இந்த நிறுவனம் தயாரிக்க கூடிய ஒவ்வொரு பொருட்களும் அதிக தரம் (High Quality) வாய்ந்ததாகவும் விரைவில் ஏதேனும் பழுது ஏற்படாத வகையிலும் உருவாக்கப்படுகின்றன.

Read Also:  How to Add Keyboard Shortcut for Dark Mode in Windows

இதனால்தான் மக்கள் அதிகமான விலை இருந்தாலும் பரவாயில்லை என்று இந்தப் பொருளையே தேடி  வாங்குகின்றனர்.

3. Your Data Safety

Your Data Safety

மற்ற நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் உங்களுடைய Personal Data அனைத்தையும் Track செய்யும் Software-தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் Apple நிறுவனம் உங்களிடமிருந்து வாங்கும் அதிக பணத்திற்கு ஏற்றவாறு உங்கள் Personal Data-வை யாரிடமும் பகிர்வது கிடையாது. உங்களுடைய Data அனைத்தும் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன கையில் வகையில் Software கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய Personal Data அனைத்தும் மிகவும் விலைமதிப்பற்றவை எனவே இதற்கு பணம் செலுத்துவதற்கு நாம் தயங்கக் கூடாது.

பணத்தைக் காட்டிலும் நம்மளுடைய Privacy மிகவும் முக்கியமானது எனவே உங்கள் Data அனைத்தும் மிக பாதுகாப்பாக இருப்பதற்கு என்னை பொருத்தவரை நீங்கள் ஆப்பிள் பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்கலாம்.

4. Resale Value

Best Resale Value

ஒரு பொருளை வாங்குவதற்கு நீங்கள் எத்தனை முறை யோச்கிறேர்களோ அதேபோல் அந்த பொருளை திரும்பவும் விற்றால் நல்ல விலைக்கு அந்த பொருள் விற்கப்படுமா? என்பதை கண்டிப்பாக நீங்கள் யோசித்து ஒரு புதிய பொருளை வாங்க வேண்டும்.

அந்த வகையில்  Apple Products மிகவும் அதிக விலையில் விற்கக் கூடியவைதான். அதனால்தான் இவ்வளவு அதிகமான விலை கொடுத்தும் மக்கள் இந்த பொருட்களை வாங்குகின்றனர்.

உதாரணமாக நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து Samsung Mobile வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடம் கழித்து அதனை விற்கும்போது  அவை அதிகபட்சமாக  இருபதாயிரம்20,000 மட்டுமே விற்கும்.

இதுவே நீங்கள் iPhone 50 ஆயிரம் கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் ஒரு வருடம் கழித்து விற்கும்போது கண்டிப்பாக 35 ஆயிரம் விற்கும்.

இவ்வாறு Resaleசெய்வதற்கு இந்த பொருள் மிகவும் மதிப்பு உள்ளவையாக இருப்பதால்தான் Apple பொருட்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.

5. Amazing Apple Stores

Amazing Apple Stores

ஆப்பிள் அதிகமான விற்பனையை  ஈட்டுவதற்குமிக முக்கிய காரணம் Amazing Stores என்றே கூறலாம். ஆமாம் மற்ற போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஆப்பிள் நிறுவனம் ஒரே கடையில் அனைத்து பொருட்களையும் விற்கின்றது.

Read Also:  How to Learn Front End Development

எனவே மக்கள் ஒவ்வொரு பொருட்களையும் வாங்குவதற்கு பல கடைகளில் ஏறி இறங்க தேவை இல்லை. Apple Amazing Store வந்தால் போதும் அவர்களுக்கு தேவையான ஆப்பிள் Products அனைத்தும் கிடைக்கும் .

இவ்வாறு பல அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வைத்துள்ளதால் எவ்வளவு விலை தான் சொன்னாலும் மக்கள் அதனையே தேடித்தேடி வாங்குகின்றனர்.

ஆப்பிள் பொருட்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் போன்றவற்றை எனக்கு தெரிந்தவரை உங்களிடம்  கீழே பகிர்ந்துள்ளேன்.

ProsCons
Simple And Clean DesignPrice is too High
Easy to UseNo Widget Support
Advanced TechnologyLess Storage
Safe and SecureSame Icon All Apps
Apple Products – Pros & Cons

Conclusion

இந்த ஒரு பதிவு Apple நிறுவனத்தின் பொருட்கள் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் என்று நான் நம்புகிறேன்.  என்னுடைய ஐந்து வருட அனுபவத்தில் என்னென்ன கற்றுக் கொண்டேனோ அதை உங்களிடம் நான் பகிர்ந்து கொண்டேன்.

ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவை எனவே அதிக விலை இருந்தாலும் நீங்கள் நம்பிக்கையாக வாங்கலாம்.

மீண்டும் இதே போல் மிகவும் பயனுள்ள தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம் நன்றி.

More Useful Contents:

Leave a Comment